×

திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி எழும்பூர் கோர்ட்டில் சரண்: மேலும் சிலருக்கு வலை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது சென்னை அண்ணாநகர் பகுதியில் வாக்காளர்களுக்கு அமமுக, பாமக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பணப் பட்டுவாடா செய்வதாக தகவல்கள் பரவியது. இதுபற்றி அறிந்ததும் அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் பரமசிவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பணப் பட்டுவாடாவை தடுத்தனர்.

இதனிடையே கடந்த 12ம் தேதி பரமசிவன் வீடு மற்றும் அவரது கார் மீது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது. இதில் பரமசிவனின் கார் எரிந்து சேதமானது. எஸ்டிபிஜ கட்சியை சேர்ந்த ஜெரினா, தேவி, திமுகவை சேர்ந்த சசி ஆகியோர் காயம் அடைந்தனர். டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் 6 பேர் கும்பல், ஹெல்மெட் மற்றும் கர்சீப்பால் முகத்தை மூடியபடி 3 பைக்குகளில் வந்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில், ஆணையர் ஜெகதீஷ் தலைமையில் தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதில், வில்லிவாக்கம் திருநகரை சேர்ந்த சயித் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த மற்றொரு நிர்வாகி சூளைமேட்டை சேர்ந்த யுனேஷ் என்பவர் நேற்று முன்தினம் மாலை எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,executive officer ,court ,Egmore , DMK executive, petrol bomb, SDPI party, administrator, Egmore court, Saran
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...