அதிர்வேட்டுகள் முழங்க மலைக்கு திரும்பினார் அழகர்

அலங்காநல்லூர்:  சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர், வைகையாற்றில் இறங்கும் வைபவம் கடந்த 19ம் தேதி நடந்தது. தொடர்ந்து அழகர், மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதாரம் மற்றும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. அனைத்து வைபவங்களையும் முடித்துக் கொண்டு, நேற்று காலை 11 மணிக்கு கோட்டைவாசல் வழியாக அழகர் தங்கப்பல்லக்கில், அழகர்மலைக்கு திரும்பினார்.  

Advertising
Advertising

அப்போது அதிர்வேட்டுகள் முழங்க, வாண வேடிக்கையுடன் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷம் முழங்க பக்தர்கள் வண்ண, வண்ண பூக்கள் தூவி சுவாமிக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி சுவாமியை சுற்றி வந்து திருஷ்டி கழித்தனர். தொடர்ந்து அழகர், சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: