பொள்ளாச்சி போல் பெரம்பலூரில் அரங்கேறிய சம்பவம் மாணவிகள் பலாத்காரம் அம்பலப்படுத்திய வக்கீலிடம் ஆதாரம் கேட்கும் போலீஸ்: ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவீர்கள் என்று கூறி தர மறுத்ததால் பரபரப்பு

பெரம்பலூர்: பொள்ளாச்சிபோல பெரம்பலூரில் கல்லூரி மாணவிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான ஆதாரத்தை தர வக்கீல் மறுத்து விட்டார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதால் காவல் துறை மீது நம்பிக்கையில்லை என அவர் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தலிடம் கடந்த 21ம் தேதி வக்கீல் அருள் என்பவர் கொடுத்த புகாரில், பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்காரம் போன்று பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெரம்பலூர் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரும், போலி நிருபரோடு இன்னும் சிலரும் கும்பலாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்கால நலன் கருதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இதனையடுத்து எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்(பொ) சுப்புலெட்சுமி, அதிமுக முக்கிய பிரமுகர், போலி நிருபர், இன்னும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தன்னிடமுள்ள ஆதாரங்களை 23ம் தேதி (நேற்று) நேரில் வந்து ஒப்படைக்கும்படி இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி, அருளுக்கு சம்மன் அனுப்பியிருந்தார். இதனையடுத்து நேற்று தனிப்படையை சேர்ந்த ஏடிஎஸ்பி ரெங்கராஜன், அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி ஆகியோர் முன்னிலையில் வழக்கறிஞர் அருள் ஆஜரானார்.

அங்கு நடந்த விபரம் குறித்து வழக்கறிஞர் அருள் தெரிவித்தாவது:

ஏடிஎஸ்பி ரெங்கராஜன், என்னிடம் உங்களிடம் இருக்கும் ஆவணங்களை தாருங்கள் என கேட்டார். அதற்கு நான் உங்களிடம் நான் கடந்த 21ம் தேதி புகார் மனு கொடுத்தேன். நீங்கள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதைக்கூறுங்கள் எனக்கேட்டேன். அதற்கு ஏடிஎஸ்பி ரெங்கராஜன், உங்கள் புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். அதற்கு நான் சம்பவம் நடந்த இடத்தை சொல்லியிருக்கிறேன், ஓட்டல் குறித்து சொல்லியிருக்கிறேன்.  

பெயரை சொல்லியிருக்கிறேன், இதுவரை ஏன் நீங்கள் யாரையும் அழைத்து கூட விசாரிக்கவில்லை என கேட்டேன். அதற்கு ஏடிஎஸ்பி நீங்கள் ஆதாரத்தை கொடுங்கள் என்றார். நான் ஆடியோ ஆதாரமெல்லாம் தர முடியாது. உங்கள்மேல் இருக்கும் நம்பிக்கையே போய்விட்டது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக நீங்கள் குற்றவாளியை காப்பாற்றும் நோக்கிலேயே செயல்படுகிறீர்கள். உங்களை நம்பி ஆடியோவை தரமுடியாது என கூறினேன்.

பின்னர் சிறிதுநேரம் நான் வைத்திருந்த முக்கிய ஆதாரங்களில் ஒன்றான ஆடியோவை ஏடிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் காதில் கேட்கும்படி சிறிது நேரம் ஒலிபரப்பி நிறுத்திவிட்டு இதுதான் ஆதாரம். இன்னும் முழுமையாக ஆடியா இருக்கிறது. வெள்ளிக்கிழமைக்குள் நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் எப்படி ஆடியோவை வெளியிடுவேன் எனக்கூறிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அறை எண் 114

வழக்கறிஞர் அருள் மேலும் தெரிவிக்கையில், இந்த வழக்கு முடியும் வரை வழக்கின் விபரம் மற்றும் எனது தரப்பில் நீங்கள் எதிர்பார்க்கும் பதில்கள் குறித்த விபரங்கள் வாட்ஸ்அப் மூலம் உடனுக்குடன் அப்டேட் செய்கிறேன். அந்த வாட்ஸ்அப்பிற்குக்கூட அறை எண் 114 எனப்பெயரிட்டுள்ளேன் எனத்தெரிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பெண்களிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படும் நட்சத்திர ஓட்டலின் அறை எண்தான் இந்த 114 என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: