தோட்டக்கலை பண்ணையில் கோடை கால பயிற்சி

திருவொற்றியூர்: மாதவரம் அடுத்த பால்பண்ணை பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பற்றி அறிந்து கொள்வதற்காக கோடைகால பயிற்சி முகாம் கடந்த 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பயிற்சி முகாம் வருகின்ற மே மாதம் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த முகாமில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பற்றி அறிந்து கொள்ளவும், குறுகிய காலத்தில் பயிற்சி பெற்று தங்கள் திறைமைகளை வெளிக்காட்டிட தோட்டக்கலை துறை தகவல்கள், தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பது, வீட்டிலேயே அலங்கார செடிகள் வளர்ப்பது, வீட்டை சுற்றி தோட்டம் அமைத்தல், வீட்டிலேயே காளான் வளர்ப்பது, மாடித்தோட்டம் அமைப்பது மற்றும் சாக்லேட் பொருட்கள் தயாரிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இதில் ஒருவருக்கு மூன்று நாள் பயிற்சி கட்டணமாக ₹300 வசூலிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் தோட்டக்கலை பண்ணை சார்பில் செடி வழங்கப்படுகிறது. மேலும் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க தோட்டக்கலை துறையின் சார்பாக விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை பண்ணை செடிகள் நினைவுப் பரிசாக வழங்கும் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.மேலும் விவரங்கள் அறிய 9715588927,  9444805265 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: