சில்லி பாயின்ட்...

* ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெறும் என்று இலங்கை அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ் கூறியுள்ளார்.

* இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலெப், ஸ்டட்கர்ட் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

* ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் கடந்த 54 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், இம்முறை வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்புடன் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து களமிறங்குகின்றனர். 1965ல் இந்திய வீரர் தினேஷ் கண்ணா தங்கம் வென்றுள்ள நிலையில், கடந்த ஆண்டு எச்.எஸ்.பிரணாய், சாய்னா இருவரும் வெண்கலம் வென்றனர். 2010 மற்றும் 2016லும் சாய்னா வெண்கலம் வென்றுள்ளார். பி.வி.சிந்து 2014ல் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

* மும்பை இந்தியன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்க வீரர் பியூரன் ஹெண்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

* டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ரிஷப் பன்ட் ஆட்டத்தை இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வெகுவாகப் பாராட்டி உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பன்ட் 36 பந்தில் 78* ரன் விளாசியதைத் தொடர்ந்து, மைதானத்துக்குள் ஓடிய கங்குலி அவரை அப்படியே தூக்கி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், தனது ட்விட்டர் பக்கத்திலும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: