ஆசிய மல்யுத்தம் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா

ஜியான்: சீனாவில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.ஆண்கள் 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் சயத்பெக் ஒகாசோவுடன் நேற்று மோதிய பஜ்ரங் (25 வயது) 12-7 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். போட்டி முடிய ஒரு நிமிடமே எஞ்சியிருக்க, 2-7 என பின்தங்கி இருந்த அவர் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து த்ரில் வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.அரியானா மாநிலம் குடான் கிராமத்தை சேர்ந்த இவர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2வது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சீனாவில் நடைபெறும் ஆசிய மல்யுத்த...