2வது நாளாக பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

மணிலா:  பிலிப்பைன்சில் இரண்டாவது நாளாக நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது.பிலிப்பைன்சின் லுசான் தீவில்  நேற்று முன்தினம் மாலை 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துடுபிகானில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6. புள்ளிகளாக பதிவானது. நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி சுமார் 10 பேர் வரை இறந்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய நிலநடுக்கத்திலும் பல கட்டிடங்கள் இடிந்தன. அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு  அலறியடித்து வெளியேறினார்கள்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: