மியான்மரில் நிலச்சரிவு 50 தொழிலாளர்கள் பலி

யங்கூன்: மியான்மர் நாட்டில் மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.வடக்கு மியான்மரில் உள்ள காச்சின் மாநிலத்தில் மரகத தாது சுரங்கங்கள் அதிகளவில் உள்ளன. அப்பகுதியினர் கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மலைபோல் குவித்து  வைக்கப்படும் தாது கழிவுகளில் இருந்து தங்கள் வாழ்வாதாரத்துக்கான பொருட்களை ஈட்டுகின்றனர். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11.30 மணியளவில் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது குவித்து  வைக்கப்பட்டிருந்த தாது கழிவுகள் மளமளவென்று சரிந்து, சுரங்கத் தொழிலாளர்கள் தூங்கி கொண்டிருந்த குடிசைகளின் மீது விழுந்தது.

Advertising
Advertising

இதில் 5 தொழிலாளர்கள். மேலும் 0க்கும் மேற்பட்ட இயந்திரங்கள், வாகனங்களும் மண்ணில் புதைந்தன. இதுகுறித்து பாகந்த் நகர போலீஸ் அதிகாரி கூறுகையில், ``இதுவரை 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணாமல்  போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை’’ என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: