×

மேலூர் அருகே அடிப்படை வசதி இல்லாத ‘வீரசிங்கம்பட்டி’: அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேலூர்: மேலூர் அருகே சாலை, குடிநீர், சாக்கடை என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வீரசிங்கம்பட்டி கிராமம் தனித் தீவாக மாறி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே சேக்கிப்பட்டி ஊராட்சியில் உள்ளது வீரசிங்கம்பட்டி. அழகர்மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சேக்கிபட்டியில் இருந்து வீரசிங்கம்பட்டி செல்லும் 4 கிமீ. தூரத்திற்கான தார் சாலை 18 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இச்சாலையில் பல இடங்களில் தார் சாலை இருந்ததாற்கான அறிகுறியே இல்லை, தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் இந்த ஊருக்கு அரசு டவுன் பஸ் வந்து செல்வது வழக்கம். இச்சாலை சரியில்லாததால் அவ்வப்போது டவுன் பஸ்கள் இங்கு வருவதை நிறுத்திக் கொள்கிறது. முக்கியமாக, ஊருக்கு 108 ஆம்புலன்சை அழைத்தால் மெயின் ரோட்டில் நிற்கிறோம், நீங்கள் இந்த சாலையை கடந்து வந்து ஆம்புலன்சில் ஏறிக் கொள்ளுங்கள் என கூறவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,‘‘5 நிமிடத்தில் கடக்க வேண்டிய இந்த சாலையை கடக்க சுமார் அரை மணி நேரம் ஆகிறது. கிராமத்தில் போடப்பட்ட மேல்நிலை தொட்டி, சின்டெக்ஸ் தொட்டி, அடிபம்பு ஆகியவை செயலிழந்து கிடக்கிறது. மின் மோட்டார்கள் பழுதானதால் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு விட்டது. குடிநீருக்காக ஆழ்துளை குழாய்களை தேடி கிராம மக்கள் தினசரி அலையும் நிலை உள்ளது. முறையான கழிவு நீர் வாய்க்கால்கள் இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. 160 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : facilities ,Melur , Melur, base facility, Weerasinghamampatti, officials
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி