×

மார்த்தாண்டம் அருகே நல்லூர் வால்குளத்தில் கலக்கும் கழிவுகள்: பாதுகாக்க கோரிக்கை

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு ரயில்வே கிராசிங் பகுதிக்கு சற்று முன்னதாக சாலையை ஒட்டி நல்லூர் குளம் உள்ளது. நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்த குளம் ஆறரை ஏக்கர் பரப்பளவு கொண்டது.
ஆனால், தற்போது ஆக்ரமிப்பின் பிடியில் சிக்கி 2 ஏக்கர் அளவாக சுருங்கி விட்டது. இக்குளத்தின் அருகில் குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலும் அமைந்துள்ளது.நல்லூர் ஏலா உட்பட சுற்றுப்புற விவசாயத்திற்கு நீராதாரமாகவும், அப்பகுதி மக்களின் தேவைகளையும் இந்த குளம் பூர்த்தி செய்து வந்தது. மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் ஆதாரமாக விளங்கி வந்தது. ஆனால், தகுந்த பராமரிப்பு இல்லாததாலும், குளத்தில் கழிவுகள் கொட்டப்பட்டு வந்ததாலும் நாளடைவில் இந்த குளம  பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்தது.

மேலும் குளத்தில் போதிய நீர் சேகரிக்கவும் வசதியில்லை. குளம் சேறு, சகதிகள் நிறைந்து, பாசிகள் மற்றும் புற்கள் வளர்ந்து புல்வெளி மைதானம் போல காட்சியளித்தது. இதுகுறித்து தமிழ்முரசில் செய்தி வெளியானது. இந்த நிலையில் ஓராண்டுக்கு முன்பு நல்லூர் வால்குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த நிலையில் சுற்றுப்பகுதிகளில் இருந்து கழிவுகள் குளத்தில் கலந்து வருகின்றன. குறிப்பாக அப்பகுதியில் உள்ள ஒர்க்-ஷாப்புகள், குளக்கரையில் நிறுத்தி விடப்பட்டு கழுவப்படும் வாகனங்களில் இருந்து வெளியேறும் ஆயில் உள்ளிட்ட கழிவுகள் குளத்தில் கலந்து வருகின்றன. இதனால் குளத்து நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நீராதாரங்களை காக்கும் பொருட்டும், அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையிலும் நல்லூர் வால்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக தூர்வாரி கழிவுகள் கலக்காமல் பராமரித்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nallur Vallkulam ,Marthandam , Marthandam, Nallur valkulmu, waste, demand to protect
× RELATED மார்த்தாண்டம் லாரி பேட்டை முன்...