×

திருவட்டாரில் சூறைக்காற்று கனமழைக்கு வாழை மரங்கள் சேதம்

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், கோடைக்காலம் தொடங்கியபின் வெயில் வறுத்தெடுத்து வந்தது. மக்களால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. நீர்நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக குறைந்தது. பல நீர்நிலைகள் வறண்டு போயின.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் தினமும் மதியத்துக்கு பின் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பநிலையும் கணிசமாக குறைந்துள்ளது. வெப்பத்தால் சோர்ந்திருந்த மக்களுக்கு கோடை மழையால் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் திடீரென பலத்த சூறைக்காற்றும் வீசியது. இதில் திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் குலை தள்ளிய நிலையில் காணப்பட்ட நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. கடந்த 3 மாதங்களாக கடும் வெயில் நிலவியதால் விவசாயிகள் நீண்ட தூரத்தில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து ேதாட்டங்களில் பாய்ச்சி வாழை மரங்களை காத்து வந்தனர். ஆனால் பலனை அனுபவிக்கும் நேரத்தில் சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்தது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruvattar , Thiruvattar, storm, heavy rain, banana trees, damage
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்