×

விரைவில் தென்மேற்கு பருவக்காற்று 2,000 முதல் 5,000 மெகாவாட் ‘கரன்ட்’ கிடைக்கும்: காத்திருக்கும் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்

சென்னை: விரைவில் தென்மேற்கு பருவக்காற்று வீசவுள்ள நிலையில், அதை எதிர்பார்த்து காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர். சீசன் துவங்கியதும் கூடுதலாக 2,000 முதல் 5,000 மெகாவாட் அளவிற்கு  மின்சாரம் உற்பத்தியாக வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி சராசரி மின்தேவையின் அளவு 15,500 மெகாவாட்டிற்கும் மேல் உள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீத மின்தேவையை  காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பூர்த்தி செய்து வருகின்றனர். காற்றாலைகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கோவை மாவட்டங்களில் உள்ளது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் ஒருபகுதியை,  அதை அமைத்த நிறுவனங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மற்றொரு பகுதியை மின்வாரியத்திற்கு விற்பனை செய்கிறார்கள். அவ்வாறு விற்பனை செய்யும் மின்சாரத்தை, வாரியம் ஒரு யூனிட், ரூ.2.70 முதல்  ரூ.4.16 வரை கொடுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது தினசரி 800 மெகாவாட் அளவிற்கு மட்டுமே இங்குள்ள காற்றாலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு காற்று வீசுவது குறைவாக இருப்பதே காரணம். இந்நிலையில் விரைவில்  தென்மேற்கு பருவாக்காற்று துவங்கவுள்ளது. அப்போது காற்றின் வீச்சு அதிகமாக இருக்கும்.இதனால் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவும் அதிகரிக்கும் என்பதால் அவர்களுக்கு வருமானமும் அதிகரிக்கும். அதனால் தென்மேற்கு  பருவக்காற்றை எதிர்பார்த்து காற்றாலை உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து காற்றாலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தற்போது தினசரி 800 மெகாவாட் அளவிற்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது.  இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீச துவங்கும். தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவக்காற்று நீடிக்கும். அப்போது காற்று அதிகமாக வீசும் என்பதால் மின் உற்பத்தியும்  அதிகரிக்கும். அதாவது 2,000 மெகாவாட்டில் இருந்து 5,000 மெகாவாட் வரை மின்சாரம் கூடுதலாக உற்பத்தியாகும். இதன்மூலம் நாங்கள் கூடுதலாக மின்சாரத்தை வாரியத்திற்கு வழங்க இயலும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : manufacturers , Southwest monsoon, wind power generators
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல் அனைத்து...