×

சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சுழி திருமேனிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை. மேலும் இது ரமண மகரிஷி பிறந்த தலமும் ஆகும்.

இதற்கிடையே, திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பழமையான மயில் சிலை மாயமானதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 1300 ஆண்டு பழமையான மயில் சிலை மாயமானது குறித்து நடவடிக்கை எடுக்காததால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பொன்.மாணிக்கவேல் புகார்:
இதற்கிடையே, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தேவையான உதவிகளை அரசு செய்வதில்லை, உள்கட்டமைப்பு நிதி ஒதுக்குவது குறித்த உத்தரவுகளை நிறைவேற்றவில்லை என சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக கோயில் சிலைகளை மீட்க சிறப்புக்குழு அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகளும், தொல்லியல்துறையும் ஏப்ரல் 29-ம் தேதி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai High Court , Statue, temple, the Madras High Court, comment
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...