தாய்லாந்து நாட்டில் 68 ஆண்டுகளுக்கு பின் பதவியேற்கவுள்ள புதிய மன்னர் : மே 4ம் தேதி முடிசூட்டு விழா

பாங்காக் : தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக மகா வஜ்ரலாங்கார்ன் வரும் மே மாதம் 4ம் தேதி பதவியேற்பதை அடுத்து பதவியேற்கும் விழாவிற்காக பல்வேறு சடங்குகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தாய்லாந்து நாட்டில் 70 ஆண்டு காலமாக மன்னராக இருந்த பூமிபோல் கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கு பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது மகன்  வஜ்ரலாங்கார்ன் தாய்லாந்து நாட்டின் மன்னராக வரும் மே மாதம் 4ம் தேதி முறைப்படி முடி சூட உள்ளார்.

இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், புதிய மன்னரின் ஆயுட் காலத்திற்கும் நாட்டின் நன்மைக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. மே மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ள பிரமாண்ட முடிசூட்டு விழாவின் ஒரு பகுதியாக புதிய அரசரின் பெயர், பட்டங்கள் மற்றும் ஜாதகம் உள்ளிட்டவற்றை தங்க தகட்டில் பொறிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பாங்காக் நகரில் உள்ள புத்தர் கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசவை ஜோதிடர் வல்லுநர்கள், புத்தத் துறவிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 1950ம் ஆண்டுக்கு பிறகு தாய்லாந்து நாட்டில்  புதிய மன்னருக்கு முடிசூட்டு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: