×

கர்நாடகாவில் வாக்களிக்க குழந்தையுடன் வந்த தாய்: உதவிகரம் நீட்டிய காவல் அதிகாரி

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தல் பாதுகாப்புப் பணியின் போது காவல் அதிகாரி ஒருவர் குழந்தையை கொஞ்சி மகிழும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 11ம் தேதியும் 91 தொகுதிகளிலும், 2ம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், கோவா, ஒடிசா, சட்டீஸ்கர், அசாம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று 3-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே கர்நாடக மாநிலம் விஜயபுரா தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க குழந்தையுடன் வந்த தாய் வாக்குப்பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதை கவனித்த காவல் அதிகாரி விதேஷ் குமார் என்பவர் குழந்தையை தன்னுடன் வைத்துக் கொண்டார். அவர் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Assistant Police Officer ,Karnataka , Karnataka, child, mother, assistant, police officer
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...