பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவை தரக்கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை : பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வசதி செய்து தருவது குறித்து மத்திய அரசும், பி.எஸ்.என்.எல். நிறுவனமும் உரிய விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தனியார் செல்போன் சேவை நிறுவனங்கள் அதிவேக சேவையான 4ஜி சேவையை வழங்கும் நிலையில் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். இன்னும் அந்த சேவையை வழங்க முன்வரவில்லை. தனியார் செல்போன் சேவை நிறுவனங்களை போல பிஎஸ்என்எல் நிறுவனமும் 4ஜி சேவையை வழங்க உத்தரவிடக்கோரி வெங்கடேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4ஜி சேவை இல்லாததால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் பி.எஸ்.என்.எல்லின் அலட்சிய போக்கால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், தனியார் நிறுவனங்களுக்கு லாபம் சென்று சேரும் வகையில் அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து வருவாய் அரசுக்கு நேரடியாக செல்லவும், மக்கள் பயன்பெறவும் 4ஜி சேவையை விரைந்து அளிக்க உத்தரவிட மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர், பி.எஸ்.என்.எல். நிறுவனத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: