சீனா அமைதியை விரும்புகிறது; படையை வைத்து கொண்டு பிற நாடுகளை அச்சறுத்துவதை சீனா ஒருபோதும் ஆதரிக்காது : அதிபர் ஜி ஜின்பிங்

பெய்ஜிங் : சீனா அமைதியை விரும்புவதாகவும் படையை வைத்து கொண்டு பிற நாடுகளை அச்சறுத்துவதை சீனா ஒருபோதும் ஆதரிக்காது என்றும் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீன கடற்படையின் 70ம் ஆண்டு தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு கிங்டோ கடற்கரையில் பிரமாண்ட போர் கப்பல் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்றனர். மேலும் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலின் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. 26ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த பிரமாண்ட போர்க்கப்பல் அணிவகுப்பு நிகழ்ச்சியை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். பல ஆண்டுகளாக சீன கடற்படை சிறந்து விளங்குவதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் போர்க்கப்பல்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து இருப்பதாகவும் ஜி ஜின்பிங் பெருமையுடன் தெரிவித்து இருக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: