சென்னை சென்ட்ரல்- அரக்கோணம்- செங்கல்பட்டு- கடற்கரை சுற்றுவட்டாரப்பாதையில் சர்குலர் ரயில் இயக்கம்

சென்னை: சென்னை சென்ட்ரல்- அரக்கோணம்- செங்கல்பட்டு- கடற்கரை சுற்றுவட்டாரப்பாதையில் சர்குலர் ரயில் இயக்கம் இன்று முதல் தொடங்கியது. சென்னையில் இருந்து அரக்கோணம் வரையிலும், அதேபோல சென்னையில் இருந்து தாம்பரம் வழியாக ஏற்கனவே மின்சார ரயில் சேவை உள்ளது. செங்கல்பட்டை அடுத்த தக்கொலத்தில் இருந்து அரக்கோணம் வரை ஒரு 10கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சார ரயில்கள் துவங்குவதற்கான பணிகள் நடைபெற்றது. தற்போது அந்த பணிகள் முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரல்- அரக்கோணம்- செங்கல்பட்டு- கடற்கரை சுற்றுவட்டாரப்பாதையில் சர்குலர் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தினமும் காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படும். அரக்கோணம், திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மாலை 4.10 மணிக்கு ரயில் கடற்கரை வந்தடையும். மறுமார்க்கமாக கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு ரயில் புறப்படும். தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் வழியாக மீண்டும் ரயில் கடற்கரை ரயில் நிலையம் வந்து சேரும். காஞ்சிபுரம் செங்கல்பட்டு பகுதியில் இருக்கும் பயணிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: