அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் பண்ணை பகுதியில் விழுந்து விபத்து : 6 பேர் பலி

வாஷிங்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று வயல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரைக்கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்த இந்த விமானம் Kerrville நகரில் உள்ள பண்ணை பகுதியில் விழுந்தது. இந்த விமானம் நேற்று காலை 9 மணியளவில் விபத்துக்குள்ளானதை பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை அறிந்த விமானி Kerrville விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்குவதற்காக முயன்ற போது துரதிருஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானம் உடைந்த நிலையில் விமான நிலையத்திலிருந்து 6 மைல்கள் தொலைவில் கிடக்கிறது. இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கிங்ஸ்லேண்டில் உள்ள ஷெர்லி வில்லியம்ஸ் விமான நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: