வரலாற்றில் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினுடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் வருகிற 25ம் தேதி சந்திப்பு

சியோல்: வரலாற்றில் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வருகிற வியாழக்கிழமை சந்தித்து பேச இருப்பது உறுதியாகி உள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

இதற்கிடையில், டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.இந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் உள்ள விளாடிவோஸ்டோக் நகரில் வருகிற வியாழக்கிழமை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவுடனான நட்பை புதுப்பிக்கும் வகையில் இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: