உலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் : பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது

இஸ்லாமாபாத் : உலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

மே மாதம் 30ம் தேதி உலக கோப்பை தொடர் தொடக்கம்

இங்கிலாந்தில் மே மாதம் 30ம் தேதி உலக கோப்பை தொடர் துவங்க இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு, இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் நாடுகள் 15 பேர் கொண்ட அணியை தொடர்ந்து அறிவித்துக் கொண்டு வருகின்றனர். அவ்வாறு, கடந்த வாரம் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உலக கோப்பை தொடருக்கான அணிகளை அறிவித்தன.

இங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொருவரும் அனைவருடனும் ஆட வேண்டும் என்ற வடிவத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன, இதில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஜூன் 16ம் தேதியன்று களைகட்டுகிறது. இதுவரை உலகக்கோப்பையில் பாகிஸ்தான் இந்திய அணியை வென்றதேயில்லை.

இங்கிலாந்து செல்கிறது  பாகிஸ்தான் அணி

இந்நிலையில் இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி, உலககோப்பை தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணியை சந்திக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 20 ஓவர், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி பங்கேற்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெட்  பேசிய போது, பாகிஸ்தானை பொறுத்த வரையில் உலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது,எங்களைப் பொறுத்தவரை 9 போட்டிகளும் மிக முக்கியமானவை; ஆகவே எல்லா போட்டிகளையும் இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போன்றே ஆடுவோம்; சமீபத்தில் பெரிய தொடரில் இந்தியாவை வீழ்த்தியுள்ளோம். ஆகவே எங்களுக்கு அந்த சாதக நிலை உள்ளது;எங்கள் அணிதான் உலகக்கோப்பையை வெல்லும் என்று பேசப்பட்டு நாங்கள் உலகக்கோப்பைக்குச் சென்றால் அது எங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும்;ஆனால் பலவீனமான அணி என்ற நிலையில் சென்றால் அப்போதுதான் மற்ற அணிகள் அபாயத்தை உணர்வார்கள்; ஆகவே பலவீனமான அணி என்ற அடையாளம் அணி மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது; இவ்வாறு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: