என்னை சவுரவ் கங்குலி தூக்கும்போது நான் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன் : ரிஸ்ப் பந்த் மகிழ்ச்சி

ஜெய்பூர்: டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆலோசகர் சவுரவ் கங்குலி உற்சாகமாக தன்னை அரவணைத்து தூக்கும்போது தாம் மிகவும் சிறப்பாக உணர்ந்ததாக ரிஷப் பந்த் பெருமிதம் கொண்டார்.

Advertising
Advertising

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிறகு 191 ரன்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் வெற்றி பெற்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. ராஜஸ்தான் தொடக்க வீரர்களாக அஜிங்க்யா ரகானே சதம் அடித்து அசத்தினார். 20 ஓவர்களில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிறகு 191 ரன்கள் எடுத்ததது.

 எதிரணியின் பந்துகளை சிதறடித்த ரிஸ்ப் பந்த்

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களான ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஷா 42 ரன்களும் தவான் 54 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.  எதிரணியின் பந்துகளை சிதறடித்த ரிஸ்ப் பந்த் 78 ரன்களுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

சவுரவ் கங்குலி வெற்றிக் கொண்டாட்டம்

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகள் மூலம் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இதனிடையே டெல்லி அணியின் ஆலோசராக நியமிக்கப்பட்ட வங்காளப் புலி சவுரவ் கங்குலி இந்த அணியின் வெற்றிக்கு தூணாய் விளங்கி வருகிறார். இந்நிலையில் டெல்லி அணி வெற்றி பெற்ற அந்த நிமிடத்தில் சவுரவ் கங்குலி மைதானத்திற்குள் நுழைந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ரிஷப் பந்தை கட்டி அணைத்து தூக்கியபடி உற்சாகமாக வெற்றியை கொண்டாடினார். மேலும் சவுரவ் கங்குலி தமது ட்விட்டர் பக்கத்திலும் ரிஷப் பந்த் மற்றும் ப்ரிதிவி ஷாவை பாராட்டி பதிவிட்டுள்ளார். இதனிடையே போட்டி முடிந்தவுடன் ரிஷப் பந்த் மற்றும் ப்ரிதிவி ஷா உரையாடலில் ஈடுபட்டனர். அப்போது, சவுரவ் கங்குலி தன்னை உற்சாகமாக அரவணைத்து தூக்கும்போது தாம் மிகவும் சிறப்பாக உணர்ந்ததாக ரிஷப் பந்த் பெருமிதம் கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: