மணிப்பூர் மாநிலத்தில் 12 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு!

இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் 12 வாக்குச்சாவடிகளில் நாளை மறுதேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 91 மக்களவை தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் 69.43 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 95 தொகுதிகளில் கடந்த 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி தவிர கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

பீகார், ஒடிசா, அசாம் மாநிலங்களில் தலா 5 தொகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கரில் தலா 3 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், மணிப்பூரில் ஒரு தொகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது மற்றும் மிகவும் குறைந்த வாக்குப் பதிவு போன்ற காரணங்களால் 28 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என பெரும்பாலான வேட்பாளர்களின் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரசாந்த் குமார், 5 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 12 வாக்குச்சாவடிகளில் 24ம் தேதி மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அங்கு நாளை மறுவாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: