3-ம் கட்ட மக்களவை தேர்தல்: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது

புதுடெல்லி: நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 117 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 11ம் தேதியும் 91 தொகுதிகளிலும், 2ம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், கோவா, ஒடிசா, சட்டீஸ்கர், அசாம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தொகுதியில் நேற்று முன்தினம் பிரசாரம் முடிவடைந்தது. நேற்று வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பொருட்கள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் விநியோகிக்கப்பட்டது. மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டீஸ்கர், ஒடிசா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் இருப்பதால், அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: