சூலூர் தொகுதியில் போட்டியிட கோமாளி வேடம் அணிந்து சுயேச்சை மனு தாக்கல்

சூலூர்: சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட கோமாளி வேடம் அணிந்து வந்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் நேற்று மனு தாக்கல் செய்தார்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கோவை மாவட்டம் சூலூர், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைதேர்தல் மே 19ம் தேதி வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 29ம் தேதியாகும். வேட்பு மனு பரிசீலனை 30ம் தேதியாகும். இதன்படி, சூலூர் தொகுதியில் நேற்று, சுந்தராபுரத்தை சேர்ந்த நூர் முகம்மது(60), என்பவர் சுயேச்சையாக போட்டியிட கோமாளிபோல் வேடமணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு படிவத்தை மட்டும் தாக்கல்  செய்த அவர் அதனுடனான வேறு எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அவற்றை பின்னர் தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சூலூர் குளக்கரையில் இருந்து வட்டாச்சியர் அலுவலகம் வரை நூர்  முகம்மது  கோமாளிபோல் வேடம் அணிந்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

காந்தி வேடத்தில் மனுதாக்கல்: அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நாமக்கல்லை சேர்ந்த அகிம்சா சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மட்டும் சுயேட்சை வேட்பாளராக காந்தி வேடத்தில் வந்து வேட்பு மனு  தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி மனுவை பெற்று கொண்டார். வேட்புமனு தாக்கலை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தை சுற்றிலும், அரவக்குறிச்சியின் 5 நுழைவாயில் சாலைகள் உள்ளிட்ட முக்கிய  சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒட்டப்பிடாரத்தில் ஒருவர்கூட வரவில்லை: ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலராக தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் (கலால்) சுகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். காலை 11 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரை தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் காத்திருந்தும் முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லைசந்தன வீரப்பனின் உறவினர்:  திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில்,  தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, அக்னி ராமச்சந்திரன் சுயேச்சையாக முதல் வேட்புமனுவை தேர்தல் அலுவலர் பஞ்சவர்ணத்திடம் தாக்கல் செய்தார்.  இவர் சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினராவார்.

அரவக்குறிச்சி தேர்தல் அலுவலருக்கு போலீஸ் பாதுகாப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கலால் உதவி இயக்குனர் மீனாட்சிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு  போடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: