பிரதமரை `திருடன்’ என கூறியதற்கு வருத்தம் தெரிவித்தார் ராகுல்

புதுடெல்லி: ரபேல் ஒப்பந்த தீர்ப்பில் பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என கூறியதாக குறிப்பிட்டதற்காக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியை திருடன் என்று கூறியதாக கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜவினர்  மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 15ம் தேதி, பாஜ எம்பி மீனாக்‌ஷி லெகி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி வரும் 22ம்  தேதிக்குள் இதுகுறித்து ராகுல் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து ராகுல் காந்தி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பிரசாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் தான் கூறிய கருத்தை அரசியல் எதிரிகள் தவறாக திரித்து கூறியதாகவும்  அதற்காக வருந்துவதாகவும் விளக்கமளித்துள்ளார்.ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறு சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: