ரபேலில் உதவியதற்காக அம்பானி தந்த கைமாறு என்ன? மோடியிடம் மக்கள் கேட்க வேண்டும்

அமேதி: ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் 30,000 கோடியை அனில் அம்பானியிடம் அளித்ததற்காக, அவர் என்ன கைமாறு செய்தார் என்று பிரதமர் மோடியிடம் மக்கள் கேள்வி கேட்க வேண்டும்’’ என்று காங்கிரஸ்  தலைவர் ராகுல் கூறினார்.உத்தரப் பிரதேசத்தின் திலோய் பகுதியில் நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:பிரதமர் மோடி பிரசாரத்தில் பொய் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வருகிறார். அவரிடம் மக்கள் ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ₹30,000 கோடியை அனில் அம்பானியிடம் பிரதமர் மோடி  கொடுத்தார். இதற்காக அம்பானி செய்த கைமாறு என்ன என்பதுதான் அந்த கேள்வி. இதை மக்கள் அவரிடம் கேட்க வேண்டும்.மமக்களவை தேர்தலுக்கு பின்னர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

அப்போது நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்மை தெரியவரும். பிரான்ஸ் முன்னாள் பிரதமர் பிரான்காய்ஸ் ஹாலண்டே கூறியது என்ன, பிரான்ஸ் பாதுகாப்பு ஆவணங்களில் இருப்பது என்ன என்பது அப்போது தெரியவரும்.  இதில் இரண்டு பேரின் பெயர்கள்தான் வெளிவரும். ஒன்று அனில் அம்பானி, மற்றொன்று நரேந்திர மோடி.இதற்கு முன்பு எப்போதாவது, விவசாயிகள் உடனோ அல்லது தொழிலாளர்கள் உடனோ ‘காவலாளி’யை பார்த்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு விவசாயியும், கட்டாயமாக தங்களுடைய நிலத்தின் காவலாளிகளாக ஆக்கப்பட்டனர்.  தன்னை பிரதமர் ஆக்க வேண்டாம் என்றும், காவலாளியாக ஆக்கும்படியும் மோடி பிரசாரங்களில் கூறி வருகிறார். ஏனெனில், ரபேல் ஒப்பந்தத்தில் அவருடைய திருட்டு வெளிப்பட்டுவிட்டது என்பதால், இப்ேபாது காவலாளியாக ஆக்கும்படி கூறி வருகிறார்.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: