பெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் பிரான்ஸ்: 6வது முறையாக தகுதி

ரூவன்: பெடரேஷன் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடரின் உலக பிரிவு பைனலில் விளையாட, பிரான்ஸ் அணி 6வது முறையாக தகுதி பெற்றது. ரூவன், கைண்ட் அரங்கில் நடந்த அரை இறுதியில் ரோமானியா அணியுடன் மோதிய பிரான்ஸ் 3-2 என்ற கணக்கில் போராடி வென்றது.  ஒற்றையர் ஆட்டங்களில் பிரான்ஸ் சார்பில் கரோலின் கார்சியா, பாலைன் பார்மென்டியர் தலா ஒரு வெற்றியும், ரோமானியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 2 வெற்றியையும் பெற்றதால் 2-2 என சமநிலை நிலவியது.

இதைத் தொடர்ந்து, கடைசியாக நடந்த பரபரப்பான இரட்டையர் ஆட்டத்தில் பிரான்சின் கரோலின் கார்சியா - கிறிஸ்டினா மிளாடெனோவிச் ஜோடி 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரோமானியாவின் சிமோனா ஹாலெப் - மோனிகா நிகுலெஸ்கு ஜோடியை வீழ்த்தியதை அடுத்து பிரான்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி பைனலுக்கு முன்னேறியது. பிரான்ஸ் - ஆஸ்திரேலியா மோதும் இறுதிப் போட்டி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: