ஐபிஎல் டி20 பைனல் ஐதராபாத்துக்கு மாற்றம்

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன் இறுதிப் போட்டி, சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் பைனல் மே 12ம் தேதி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடப்பதாக இருந்தது. சிஎஸ்கே அணி நடப்பு சாம்பியன் என்பதால் தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டி சென்னைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மூன்று (ஐ, ஜே, கே) கேலரிகளை பயன்படுத்த இன்னும் அனுமதி கிடைக்காத நிலையில், பைனலை ஐதராபாத்துக்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்தது.

Advertising
Advertising

இது குறித்து பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில், ‘மூன்று கேலரிகளுக்கான அரசு அனுமதி பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் டிக்கெட் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாயில் இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு பைனலை ஐதராபாத்துக்கு மாற்றி உள்ளோம்’ என்றார்.

புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் சிஎஸ்கே வந்தால், சேப்பாக்கம் மைதானத்தில் மே 7ம் தேதி குவாலிபயர் 1 ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். எலிமினேட்டர் (மே 8), குவாலிபயர் 2 (மே 10) ஆட்டங்கள் விசாகப்பட்டணத்தில் நடைபெற உள்ளன. டிரெய்ல்பிளேசர்ஸ், சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி ஆகிய 3 அணிகள் மோதும் மகளிர் ஐபிஎல் டி20 போட்டி ஜெய்பூரில் (மே 6-10) நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: