மீன்பிடி தடைகாலம் அமல் கரையோரத்தில் வலைவீசி மீன் பிடிக்கும் மீனவர்கள்

கடலூர்: மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் மீனவர்கள், கடலுக்கு செல்லாமல் கரையில் நின்று வலைவீசி மீன்களை பிடித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 முடிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. 56 கி.மீ தூரம் கொண்ட கடற்கரையை யொட்டி  49 மீனவர் கிராமங்கள் உள்ளன. மீன் பிடி தடை காலத்தால் ஆழ்கடலில் மீன் பிடிக்க பயன்படுத்தப்படும் 664 விசைப்படகுகள், 6 ஆயிரம் பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடலூர் துறைமுகப்பகுயிலும் மீனவர் கிராமங்களிலும் பழுதடைந்த படகு மற்றும் வலைகளை மீனவர்கள் சீரமைத்து வருகின்றனர்.  கடலூர் துறைமுகத்தில்  படகுகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்களும் தொழில்நுட்ப  பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.  படகின் பக்கவாட்டில் ஒட்டிக்கிடக்கும் கிளிஞ்சல்களையும் பாசிகளையும் அகற்றி அவற்றை செப்பணிட்டு வண்ணம் அடிக்கும் பணியினையும் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். மீனவர்  கிராமங்களில் பெரிய நிழற்பந்தல்கள் அமைத்து அனைத்து வகையான வலைகளையும் செப்பணிடும் பணியில் ஏராமளான மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் மீனவர்கள் கரையோரத்தில்  வலைவீசி மீன்களை பிடித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: