பெரம்பலூர் மாவட்டத்தில் 30 கிராமங்களில் முயல்வேட்டை திருவிழா: பிடிபட்ட முயல்களுடன் இளைஞர்கள் ஊர்வலம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் தமிழ் வருடப்பிறப்பான, ஏப்ரல் 14 ம் தேதி முதல் தொடர்ச்சியாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொன்று தொட்டு முயல்வேட்டைத் திருவிழா நடத்துவது வழக்கம். இதற்காக சம்பந்தப்பட்ட கிராமங்களில் இருந்து இளைஞர்கள், சிறுவர்கள் கூட்டமாகத் தடிகள் மற்றும் நாய்களுடன் ஊருக்கு அருகே உள்ள மலையடிவாரப் பகுதி, வனப்பகுதி, ஏரிகள், கரடுமுரடான மண்மேடுகள், புதர்கள் உள்ளிட்ட  இடங்களுக்கு சென்று முயல்களை வேட்டை யாடி ஊருக்குக் கொண்டுவந்து, அதனை ஊர்வலமாக எடுத்துவந்து, சாமி க்குப் படையல் இட்டுப் பின்னர் சிறு சிறு துண்டுகளாக  வெட்டி அனைவருக்கும் பங்கிட்டு சமைத்துச்  சாப்பிடுவது வழக்கம். இந்த முயல் வேட்டைக்காக தெருவில் உள்ள வீடுகளில் இருந்து, வீட்டுக்கு ஒருவரேனும் தவறாமல் பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்டு, நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த முயல் வேட்டையில் பங்குபெறுவது பாரம்பரிய வழக்கம்,

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், லாடபுரம், ஈச்சம்பட்டி, அம்மாப்பாளையம், களரம்பட்டி, பாளை யம், சத்திரமனை கீழக் கணவாய், எசனை, தொண்டமாந்துறை, செங்கு ணம், வெங்கலம், பூலாம்பாடி, பில்வாடி  உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்களில் முயல் வேட்டைத் திருவிழா தமிழ் வருடம் முதல் மாதமான சித்திரை மாத த்தில் காவல்துறை அனுமதி பெற்று தவறாமல் நடைபெறும். நடப்பாண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றதால் காவல்துறை அனுமதி முறையாக வழங்கப்படவில்லை. இருந்தாலும் பல்வேறு கிராமங்களில் தொன்றுதொட்டு நடைபெறுவது போல் இந்த ஆண்டும் முயல்வேட்டைத்  திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த முயல் வேட்டையில் பிடிபட்ட முயல்க ளுடன் ஊருக்குள் வந்த பொதுமக்கள் அவற்றைத் தோரணம் கட்டி மேள தாளத்துடன் ஊர்வலமாகச் சுற்றி எடுத்து வந்து, கோவிலில் வைத்து,  வழிபாடு நடத்தி, பங்கிட்டு  வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர்.  நடப்பாண்டு காவல்துறை அனுமதி மறுத்தும் எந்த கிராமத்திலும் பிரச்சினைகள் ஏதுமின்றி முயல் வேட் டை திருவிழாக்கள் நடந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: