மதுரை விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும்: கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி

மதுரை: மதுரையில் அனைத்துக்கட்சி வேட்பளாளர்களுடன் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி ஆலோசனை நடத்தினார். அதிமுக, மார்க்சிஸ்ட, அமமுக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மதுரை மருத்துவக்கல்லுாரியில், லோக்சபா தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளிட்ட 4 பேர் அனுமதியின்றி நுழைந்ததாக பிரச்சனை எழுந்தது. இதில் முதலில் தாசில்தார் சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் மீதி 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக, மதுரை மாவட்ட கலெக்டரிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ விளக்கம் கேட்டிருந்தார்.

பின்னர் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜியை நேரில் விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து மதுரை வந்த கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்தது குறித்து வட்டாட்சியர் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட 27 அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோருடன் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு ஆலோசனை நடத்தினார். அதில், மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் ஆவணங்கள் இருந்த அறையின் சாவியை சம்பூர்ணம் பெற்றிருக்க வாய்ப்பில்லை.

அதேபோன்று வட்டாட்சியர் உட்பட 4 பேரை பிடித்து வைத்திருந்த போது, மாவட்ட ஆட்சியர் கூறியதால் தான் 4 பேரையம் விடுவித்ததாக காவல் துறை தெரிவித்ததாகவும், இதனால் மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றம் செய்யவேண்டும் என வேட்பாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதிமுக வேட்பாளர், மாவட்ட ஆட்சியர் நடராஜன் இதுதொடர்பாக முறையான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார். 1 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் தேர்தல் அதிகாரி, இன்று நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தெரிவித்த கருத்துக்களை அறிக்கையாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: