ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி :  சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினாவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்படுவதாகவும் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு முன்னரே ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை. எனவே அவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என சொல்ல முடியாது எனவும் தெரிவித்தனர். ஆகையால் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில், எம்.எல்.ரவி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது; ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பிரச்சனையில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: