இலங்கையில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நாளை தேசிய துக்கம் அணுசரிப்பு: இன்று 8 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு

இலங்கை: இலங்கையில் 290 உயிர்களை பறித்த 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார். அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா தலைமையில் இன்று முற்பகல் தேசிய பாதுகாப்பு சபைகூடியபோது நேற்றைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்றிரவு 8 மணியில் இருந்து நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: