அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சி கொடி கட்டலாமா? : உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை : அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தங்களது வாகனங்களில் கட்சி கொடி கட்டலாமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆபத்து வளைவு பகுதிகளில் தானாக ஒளிரும் சிவப்பு விளக்குகளை பொறுத்த வேண்டும், நான்கு சந்திப்புகள் உள்ள இடத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும், சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும், இரவில் வரும் வாகனங்கள் அதிக சக்தி கொண்ட விளக்குகளை வைத்துள்ளதால் எதிரில் வருபவர்களுக்கு கண் கூசும் நிலை ஏற்படுவதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது.

இந்த விபத்துகளால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் வாகனங்களில் வரும் அரசியல் கட்சியினர் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்கள் முன்பு அரசியல் கட்சியின் கொடிகள் மற்றும் அதன் தலைவர்களின் புகைப்படங்களை வைத்து கொண்டும், வாகனத்தின் பின்பக்கம் கட்சி சார்ந்த வாசகங்களை எழுதிக்கொண்டு வருகின்றனர். இந்த செயல் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்கள் மற்றும் சக பயணிகளை அச்சுறுத்துவதற்காகவும் சட்டத்தை மீறியும் வைத்துள்ளனர்.

எனவே இவற்றை மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தங்களது வாகனங்களில் கட்சி கொடி கட்டலாமா என்பது குறித்து மோட்டார் வாகன சட்டத்தில் என்ன கூறியுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுமக்கள், காவல்துறையை மிரட்டும் வகையிலான இதுபோன்ற செயல்பாடுகளுக்கு தடை விதித்தாலே 50 சதவீத குற்றங்கள் குறையும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இவற்றிற்கு தடை விதிக்க முடியுமா என்பது குறித்து தமிழக உள்துறை செயலர், போக்குவரத்து செயலர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: