சீல் வைத்த அறைக்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை : வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்த பின் காவல் ஆணையர் பேட்டி

சென்னை : சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையங்களை நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் தொடர்ந்து 3 நாடாளுமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் துணை ராணுவ படையினர், தமிழக ஆயுதப்படை போலீசார், சென்னை மாநகர காவல் துறையினர் என ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்புடன் 500 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக விளக்கம் அளித்தார்.

மேலும் சீல் வைத்த அறைக்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்றும் காவல் ஆணையர் கூறினார். இதே போன்று புதுச்சேரியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி அருண் நேரில் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், வாக்கு இயந்திரங்களை வைக்கப்பட்டுள்ள அறையை வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் 24 மணி நேரமும் அங்கேயே தங்கி பார்வையிடலாம் என்றார். புதுச்சேரியில் 5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிபிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: