ராகுல் காந்தி வேட்பு மனுவுக்கு சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு : ஆய்வுக்குப் பின்னர் மனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு

லக்னோ : அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் குறைபாடுகள் இருப்பதாக சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனையடுத்து ராகுல் காந்தி வேட்பு மனு மீதான பரிசீலனை முடிவு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ராகுல் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி டாக்டர் ராம் மனோகர் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

ராகுல் வேட்பு மனுவில் பெயர், கல்வித்தகுதி, குடியுரிமை ஆகிய 3 அம்சங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் புகார் தெரிவித்தனர். ராகுல் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் வேட்பு மனு மீதான முடிவை அறிவிப்பதில் தாமதமானால் மற்ற வேட்பு மனுக்கள் மீதான முடிவும் ஒத்திவைக்கப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதில் வயநாடு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: