தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமன அரசாணைக்கு தடைகோரிய வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்திற்கான அரசாணையை எதிர்த்த வழக்கை வரும் 29ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக சென்னை கொளத்தூரை சேர்ந்த யோகநாதன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பிற்கான சட்டத்தை ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் இந்த குழுவில் உறுப்பினர்களாக, அரசியல்வாதிகள், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பதாகவும், இது தொடர்பாக தலைமை நீதிபதிகளிடன் கலந்து ஆலோசனை பெறவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுடன் கலந்து ஆலோசிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்தில் இந்த சட்டம் இயற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். எனவே லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்களுக்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் லோக் ஆயுக்தா சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் லோக் ஆயுக்தா சட்டத்தில் உறுப்பினர் நியமனத்திற்கான இடஒதுக்கீடுகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிகுமார் மற்றும் சுப்பிரமணியம் பிராசத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் தொடர்பாக தலைமை நீதிபதியை கலந்தாலோசிப்பது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என வாதிட்டார். மேலும் இது தொடர்பாக விரிவான தகவல்கள் அளிக்க அவகாசம் வழங்க வேண்டு எனவும் கோரிக்கை வைத்தார். அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதி ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: