இந்தியா எச்சரித்தும் கவனக்குறைவாக இருந்துவிட்டோம்...... இலங்கை பிரதமர் வேதனை

கொழும்பு: இலங்கையின் முக்கிய தேவாலயங்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டப்பட்டு இருப்பதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே இந்தியா எச்சரித்தும் அதனை பெரிதாக கருதாமல் கவனக்குறைவாக இருந்து விட்டோம் என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்று நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 290 பேர் உயிரிழந்தனர். 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் நிகழ்வதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இலங்கை காவல் துறை தலைவர் எச்சரிக்கை செய்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இலங்கை காவல் துறை தலைவர் புஜன் ஜெயசுந்தரா கடந்த 11ம் தேதி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், ‘வெளிநாட்டு உளவு அமைப்பு அளித்த தகவலின்படி, ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ அமைப்பு, முக்கிய தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார். இந்திய உளவு அமைப்புதான் இத்தகவலை இலங்கை காவல்துறைக்கு அளித்ததாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. அதற்கேற்றார் போல் நேற்று குண்டுவெடிப்பை தொடர்ந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கவனக்குறைவாக இருந்து விட்டோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். அவர் கூறியதாவது: கொழும்பில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக இந்தியா கூறிய பிறகும் நாங்கள் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டோம். உண்மையில் நாங்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டோம். சர்வதேச உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல் இருந்திருந்தால் இத்தகைய பேரிழப்பை தவிர்த்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: