அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் தனிக்கட்சியாக பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அந்த 89கட்சி தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை அக்கட்சி சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சமர்ப்பித்தார்.

அமமுகவை கட்சியாக பதிவு செய்வதன் நோக்கம்  

இரட்டை இலை சின்னம் கோரிய வழக்கில் இரட்டை இலை சின்னத்தை ஆளும்கட்சியான அதிமுக கட்சிக்கே ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தங்கள் கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் வழங்கக்கோரி அமமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குக்கர் சின்னம் கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து

அமமுகவை கட்சியாக பதிவு செய்யாத காரணத்தால் குக்கர் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இது தவிர, கட்சியை பதிவு செய்த பின்னரே நிரந்தமாக சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆதலால் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர்.

பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் தேர்வு

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அசோக் நகரில் இருக்கக்கூடிய அமமுக அலுவலகத்தில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பாக அவர் அமமுகவின் துணை பொது செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி மனு

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை கட்சி தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை அக்கட்சி சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சமர்ப்பித்தார். இந்த விண்ணப்பம் மீது தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: