இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு: 300 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது சென்செக்ஸ்

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய காலை வர்த்தகத்தின்போது சரிவு காணப்பட்டது. காலை வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது. இதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 100 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உலக அளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் போக்கு, வந்தவரை லாபம் எனக் கருதி பங்குகளை விற்பது அதிகரித்தது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்படுகிறது.

மேலும் உலக அளவில் குறிப்பாக ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாகவும், பங்குகளை விற்றுத் தள்ளும் போக்கு காணப்பட்டதாலும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்கள் சரிவை சந்தித்தன. இதனிடையே டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின்போது சரிவை சந்தித்து. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 47 பைசா அளவுக்கு சரிந்து 69 ரூபாய் 82 காசுகளாக இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: