ஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஐகோர்ட் தீர்ப்பளிக்காவிட்டால் டிக் டாக்கிற்கு தடை நீக்கப்படும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் அதன்மீதான தடை நீக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ஏற்று, சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலிக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்தது. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. ஆனால் டிக் டாக் செயலியை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் அதன்மீதான தடை நீக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து, நாளை மறுநாள் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம், டிக் டாக் செயலி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அச்செயலிக்கான தடை தானாகவே விலகியதாக கருதலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: