×

பொன்னமராவதியில் இயல்பு நிலை

பொன்னமராவதி: ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தரக்குறைவாகப்பேசி வாட்ஸ் அப்பில் வெளியிட்டவர்ளை கைது செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கடந்த 18ம் தேதி மிகப்பெரிய அளவில்  அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கடையடைப்பு, பஸ் நிறுத்தம் போன்றவை நடைபெற்றன. மறுநாள் மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது காவல்நிலையம் மீது கல்வீசப்பட்டதால் போலீஸ்  தடியடி நடத்தப்பட்டது. இந்த கலவரத்தில் 3 போலீசார், 10க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். இதன் காரணமாக பொன்னமராவதி ஒன்றியம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 இது தொடர்பாக பொன்னமராவதி தாலுகாவை சேர்ந்த ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை வரை பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் படிப்படியாக ஒரு  சில பஸ்கள் இயக்கப்பட்டது. வாட்ஸ்அப்பில் ஒரு சமூகத்தை தரக்குறைவாக பேசிய நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்காவில் உள்ள வாட்ஸ்அப் நிறுவனத்திடம் காவல்துறை மூலம்  அந்த நபர்கள் பற்றி விவரம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று (21ம் தேதி) காலை முதல் அனைத்து பஸ்களும் இயங்கின. கடைகள் திறந்திருந்தது. பொதுமக்கள் தங்களது அன்றாடப்பணிகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். இதனால் கடந்த 3 நாட்களாக  நிலவிய பதற்றமான சூழல் மாறி இயல்பு நிலை திரும்பியது. ஆயினும் அப்பகுதி தொடர் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnamaravathi , Normal status , Ponnamaravathi
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...