×

விளைநிலத்தில் உயர் மின்கோபுர பணி தடுத்து நிறுத்திய மேட்டூர் விவசாயிகள்

மேட்டூர்: மேட்டூர் அருகே மேச்சேரியில் பவர் கிரீட் நிறுவனம் விளை நிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே புகலூரிலிருந்து சட்டீஸ்கர் மாநிலத்திற்கு பவர் கிரீட் நிறுவனம் சுமார் 1,650 கிலோ மீட்டர் தூரம் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. விவசாய  நிலங்களில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உயர் நீதிமன்றம் இப்பணிக்கு தடை விதித்தது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாகோசிப்பட்டியைச்  சேர்ந்த ஆண்டியப்பன் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் நேற்று விடுமுறை நாள் என்று கூட பாராமல் 10க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு மின் கோபுரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த  ஆண்டியப்பன் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மேச்சேரி காவல் நிலையத்திற்கு சென்று பவர் கிரீட் நிறுவனம் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மின்கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவித்தார்.  போலீசார் விவசாயிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mettur ,field , High millikura ,farm, Mettur farmers, stopped
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு