×

ஓபிஎஸ் மகன் தொகுதியில் மக்கள் கொதிப்பு நீதான் ஓட்டே போடலயே பணத்தை திருப்பிக்கொடு: அதிமுக பூத் ஏஜென்டுகள் வீடு, வீடாக கறார் வசூல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிப்பகுதியில் ஓட்டுக்கு கொடுத்த பணத்தை, ஓட்டு போடாத வாக்காளரிடம் வீடு வீடாக சென்று திரும்ப பெறும் அதிமுக பூத் ஏஜென்டுகள் நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் பெரும்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 24 வார்டுகள் உள்ளன. துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத்குமாருக்கு வாக்களிக்க கூறி ஏப். 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் அதிமுகவினர்  வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். ஏப். 18ல் தேர்தல் நடந்தபோது, வாக்குசாவடியில் அதிமுக சார்பில் பூத் ஏஜென்டாக இருந்த நிர்வாகிகள், வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர் பெயர்களை ஒவ்வொன்றாக டிக் செய்து  யார், யார், ஓட்டுப்போட வந்துள்ளனர் என உறுதி செய்துள்ளனர். ஓட்டு போட வராதவர்களின் லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு கடந்த 2 நாட்களாக வீடு வீடாகச் சென்று அதிமுகவினர் ஓட்டுக்கு கொடுத்த ஆயிரம் ரூபாயை திரும்ப  கொடுங்க எனக் கேட்டுள்ளனர். கணக்கு வழக்குகளை அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதியிலுள்ள வாக்காளர்கள் கூறும்போது, ‘‘இதற்கு முன்பும், ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், அதிமுகவினர் இதுபோல லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு வீடு வீடாக வருவது வழக்கம். இந்த முறை அதிக  பணம் கொடுத்ததால் வாக்காளர்கள் சிலர் பணத்தை செலவழித்து விட்டு கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதுபோன்று நடக்கும் என தெரிந்து கொண்டு சிலர் வாங்கிய பணத்தை பத்திரமாக வைத்திருக்கின்றனர்.  அதிமுகவினர் வீடு தேடி வரும்போது உடனே கொடுத்து விட வேண்டும் என்று பணத்தை தயாராக வைத்திருந்தோம்’’ என்றனர்.ஆறாவது வார்டு பாக்கியம் கூறும்போது, ‘‘எங்க குடும்பத்திற்கு 2வது வார்டில் ஓட்டு இருக்கு. ஓட்டுப்போட அதிமுக சார்பில் ₹1000ம் வீதம் 3 ஓட்டுக்கு ₹3 ஆயிரம் கொடுத்தார். நாங்கள் ஓட்டும் போட்டு விட்டோம் ஆனால்  ஓட்டுப் போடவில்லையென பணத்தை திரும்பக் கேட்டு வந்தனர். எனவே, என் கணவர் மூலமாக பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன். எங்களை அவமானப்படுத்தியதற்கு காரணம் சொல்லியாக வேண்டும்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : OBC Son , OBS son, AIADMK Booth, house, karar ,collection
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...