தமிழகத்தில் அமைதி நிலவ அரசும், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் அமைதியான சூழல் நிலவ தமிழக அரசும், பொது மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார். இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் தற்போது நடைபெற்றபோது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் அப்பகுதி வாழ் மக்களிடம்  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலும் கலவரம் ஏற்பட்டதால் அப்பகுதியில் ஓர் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த அசம்பாவிதங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

எவரும் பிரச்னைக்கு வழி வகுக்கக்கூடாது என்பது தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எண்ணமாகும். தவறுகள், குற்றங்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், சாதிச்சண்டைகள், மோதல்கள் எல்லாம் முற்றிலும் தவிர்க்கப்பட  வேண்டியவை.சாதி, மத, மொழி, பிராந்தியம் - இவைகளுக்கு அப்பாற்பட்டு நல்லெண்ணத்தோடு, ஒற்றுமையாக, அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்க்கை வாழ வேண்டும்.எனவே இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எப்போதும் எப்பகுதியிலும் அமைதியான சூழலே நிலவ வேண்டும் என்பதற்காக ஆளும் ஆட்சியாளர்களும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: