×

மூன்றடுக்கு பாதுகாப்பு நிறைந்த வாக்குப்பதிவான இயந்திரங்கள் இருக்கும் அறைக்குள் தாசில்தாரை யார் அனுமதித்தது?: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கேள்வி

சென்னை: வாக்குப்பதிவான இயந்திரங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிக்குள் வட்டாட்சியரை அனுமதித்தது யார் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன் எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் ஆணையரை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.பின்னர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:மதுரை மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சென்ற பெண் அதிகாரி மதுரை மேற்கு தொகுதிகளின் ஆவணங்கள் வைத்துள்ள அறையில் இருந்த ஆவணங்களை அருகில் உள்ள கடையில் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு திரும்பவும் கொண்டுபோய் வைத்திருக்கிறார். அப்போது அவரை அழைத்து விசாரணை செய்த போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்த அதிகாரிகள் அவரை மீட்டு சென்றுள்ளனர். இந்த செய்தி கேள்விப்பட்ட பிறகு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்திய பிறகு சிசிடிவி பதிவை பார்க்க வேண்டும் என்று சொல்லி பார்த்தபோது அதில் வட்டாட்சியர் உட்பட 3 பேர் அலுவலகத்தில் செல்வதும் பிறகு 3 மணிநேரம் கழித்து வெளியில் வருவதும் தெரிகிறது.

மதுரை மேற்கு தொகுதி ஆவணங்கள் வைத்திருக்கும் அறைகள் மட்டும் ஏன் சீல் வைக்கவில்லை, 3 அடுக்கு பாதுகாப்பு என்று சொல்லப்படுகிறது அதை மீறி எப்படி போனார்கள், யார் அவரை உள்ள அனுமதித்தார்கள். அங்கு போராட்டம் நடத்தியும் சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் வரவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட போது நீங்கள் சொன்ன பிறகே எனக்கு விஷயம் தெரியும் என்று கூறுகிறார். அதனால் இந்த சம்பவம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மதுரையில் நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவான மனுவை கொடுத்து இருக்கிறோம். மேலும் வட்டாட்சியரை உள்ளே அனுமதித்து யார்? அந்த அறைக்கு சீல் வைக்க கூடாது என்று கூறியது யார்? மாவட்ட ஆட்சித்தலைவரும், தேர்தல் அதிகாரி சம்பந்தம் இல்லாமல் இது போன்று நடந்திருக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி கூறியதாவது:விரிவான புகாரை கொடுத்து இருக்கிறோம். நாங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியை தான் குற்றம்சாட்டுகிறோம். அவரை வைத்து விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முடிவு எடுக்கப்படும்.

விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது: மதுரையில் மட்டும் தான் வாக்கு பதிவு இயந்திரங்கள் இருக்கும் அறைக்குள் அதிகாரி சென்று சம்பவம் நடந்திருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்ட சதியாக தான் தெரிகிறது. ஆளுங்கட்சிகள் இரண்டும் ஒரே அணியில் இருப்பதால் அதிகாரிகள் அனைவரும் ஆளுங்கட்சி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்பது தேர்தல் பிரச்சாரத்தின் போதே தெரிந்தது. இப்போது வாக்கு எண்ணிக்கை முன்னதாக அவர்கள் ஒத்துழைப்பு நல்க முயற்சிக்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே 39 மக்களவைத் தேர்தலிலும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்திற்கு ெசல்வோம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது: மதுரையில்  ஒரு தாசில்தார் தன்னிச்சையாக ஒரு அறைக்கு செல்ல முடியாது. அதுவும் மேல் அதிகாரி உத்தரவு இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. ஆவணங்களை வெளியில் எடுத்துச் சென்று ெஜராக்ஸ் எடுக்கவும் முடியாது. 3மணி நேரம் அந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. ஒட்டு மொத்தமாக மக்களின் தீர்ப்புக்கு எதிராக இவர்கள் ஒரு தீர்ப்பை எழுதி விடுவார்களோ? என்கிற நிலைபாடு இருக்கிறது. ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு 35 நாட்கள் இருக்கிறது ஆனால் ஆட்சி அதிகாரம் இருப்பது மோடியிடமும், அவரின் ஆதரவாளர் எடப்பாடியிடமும் தான்.  அதனால் அச்சம் இருக்கிறது. இந்த அச்சத்தை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு ஆகும். மதுரை மேற்கு தொகுதிகளின் ஆவணங்கள் வைத்துள்ள அறையில் இருந்த ஆவணங்களை அருகில் உள்ள கடையில் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு திரும்பவும் கொண்டுபோய் வைத்திருக்கிறார். அவரை போலீசாரிடமிருந்து கலெக்டர் அலுவலகத்தில் வந்த அதிகாரிகள் மீட்டு சென்றுள்ளனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : room ,Thilshadar ,Leaders ,Secular Progressive Alliance Party , Three-tier, security, room ,Secular Progressive ,Alliance Party, Leaders Questioned
× RELATED ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள்...