×

நான்கு ஏரிகளில் நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு குறைந்தது: அடுத்த மாதம் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்க முடியாது

சென்னை: சென்னையில் உள்ள 4 ஏரிகளை சேர்த்து 462 மில்லியன் கனஅடியாக நீர் இருப்பு குறைந்துள்ளது. அடுத்த மாதம் முதல் ஏரிகள் 100 மில்லியன் லிட்டர் வரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் விளங்குகிறது. சுமார் 11 டிஎம்சி கொள்ளளவு இந்த நான்கு ஏரிகள் வடகிழக்கு பருவமழை கிடைக்கும் மழை நீரை நம்பித்தான் உள்ளது. இந்த நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால், கடந்த டிசம்பர் 31ம் தேதி 4 ஏரிகளை சேர்த்து 1.8 டிஎம்சியாக நீர் இருப்பு இருந்தது. இந்த நீர் இருப்பை கொண்டு குடிநீர் தேவையை சமாளிக்க முடியாது என்பதால் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்து விடக்கோரி தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று ஆந்திர அரசு கடந்த பிப்ரவரியில் தண்ணீர் திறந்துவிட்ட நிலையில், 1 டிஎம்சியாவது வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 379 மில்லியன் கன அடி மட்டுமே தமிழகத்திற்கு ஆந்திரா தந்தது. இதனால், 4 ஏரிகள் மூலம் ஏப்ரல் இறுதி வரை கூட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெயில் தாக்கம் காரணமாகவும், குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் ஏரிகளில் தண்ணீர் வற்றி கொண்டே வருகிறது. குறிப்பாக, 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு பூண்டி ஏரியில் 245 மில்லியன் கன அடியாகவும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 23 மில்லியன் கன அடியாகவும், 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 190 மில்லியன் கன அடியாகவும், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 4 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிகளில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி வரை குடிநீர் விநியோகம் செய்ய முடியும். இதனால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது புழல் ஏரியில் இருந்து 55 மில்லியன் லிட்டரும்,  பூண்டியில் இருந்து 55 மில்லியன் லிட்டரும் குடிநீருக்கு விநியோகிக்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் அந்த ஏரிகளில் இருந்து தண்ணீர் விநியோகிக்க முடியாது’ என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறைந்தது விநியோகம்
கடந்தாண்டு சென்னை மாநகரில் 650 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 550 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும், 100 மில்லியன் லிட்டர் வரை ஏரிகள் மூலம் குடிநீர் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lakes , The water,declined ,e aerial,distributed, next month
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5...