×

தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி இலங்கை துணை தூதரகத்திற்கு பாதுகாப்பு

சென்னை: இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு உதவி கமிஷனர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி இலங்கையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் காலை முதல் தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு செய்தனர். அப்போது கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியர் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவித்த தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம், கொழும்பு சங்கிரில்லா கொட்டேல், கொழும்பு சினமன் கிரேன்ட் கொட்டேல் என அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் 170க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு வழக்கத்தை விட உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூதரகம் முன்பு தடுப்புகள் அமைத்து, தூதரகத்திற்கு வரும் நபர்களை வெடிகுண்டு செயலிழக்க செய்யும் கருவி உதவியுடன் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறனர். அதேபோல், இலங்கை அரசுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lanka Consular Security , Continuous ,bombardment, Sri Lanka ,Security
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...