×

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததால் பறக்கும் படைகள் கலைப்பு... வழக்கமான பணிகளில் ஈடுபட யோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட, பறக்கும்படை உள்ளிட்ட அனைத்து சிறப்பு படைகளும் கலைக்கப்பட்டன. இன்று முதல் வழக்கமான பணிக்கு திரும்ப, தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 38 நாடாளுமன்ற ெதாகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடந்தது. தேர்தலுக்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது. மேலும் மே 19ம் தேதி நடைபெறும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காகவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாராம் ஆகிய தொகுதிகளில் மே 19ம் தேதி வரை பறக்கும் படைகள் தொடர்ந்து செயல்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட ெதாகுதியில் தேர்தல் முடிந்துவிட்டதால் அங்குள்ள பறக்கும் படைகள் கலைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது கணக்குகளை, தேர்தல் கணக்கு பிரிவில் ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், கடும் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.இதனால், இன்று முதல், இவர்கள் அனைவரும் தங்களது வழக்கமான பணியை தொடர, தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.

தேர்தல் பார்வையாளர்கள் சொந்த மாநிலத்துக்கு பயணம்
38 நாடாளுமன்ற தொகுதிக்கு பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். வேட்பு மனுத்தாக்கலின்போது, வந்த பார்வையாளர்கள், வாக்குப்பதிவு நாள் வரையிலான அறிக்கைகளை தயார் செய்தனர். வேட்பாளர்களின் கணக்குகளையும் பெற்றுள்ளனர். இதை தொடர்ந்து, நேற்று முன்தினம், அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.இவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை மே, 23ல் நடக்க உள்ளதால், மே, 22க்குள் மீண்டும் அவர்களின் தொகுதிக்கு வருகைபுரிவார்கள். வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று, அது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பித்துவிட்டு, மே, 25க்கு பிறகு சொந்த மாநிலத்துக்கு செல்வார்கள்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : elections ,forces ,Tamilnadu , parliamentary ,elections,Tamil Nadu,flying forces
× RELATED தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் ரூ.23...